புலிவலம் ஸ்ரீ சயன சாய் பாபா ஆலயத்தில் அமைபெற்ற தெய்வங்கள்

ஸ்ரீ வைத்திய சாய்பாபா

முதல் முதலாக 3 ஆடி உயரத்தில ஸ்ரீ வைத்திய சாய்பாபாவை (சுதையில்) 27-09-2016 அன்று நிறுவப்பட்டு அன்று முதல் நித்திய பூஜைகளுடன் பிரதி வியாழன் தோறும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. வைத்திய சாய்பாபாவை காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை. தரிசித்து பாபா அருள் ஆசியைப் பெறலாம்.

ஸ்ரீ வைத்திய கணபதி

புலிவலம் ஸ்ரீ சயன சாய் (சமாதி) ஆலயத்தில் 17.2.2018 அன்று வைத்திய 2 மஹாகணபதிக்கு நித்ய பூஜைகளுடன் பிரதி சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி அன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீ உதிபாபா

சீரடியிலிருந்து கொண்டுவரப்பட்டு 17-2-2020 அன்று நமது புலிவம் ஸ்ரீ சாய் சமாதி ஆலயத்தில் மிக விமாசையாக பிரதிஸ்டை செய்து பூஜை புனஸ்காரங்கள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ குரு தேவதத்த

இந்த ஆலயத்தில் 6.03.2022 அன்று பிரதிஸ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீ தத்தகுரு சன்னதி மேல் கோபுரத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் அமர்ந்து அற்புதமான ஸ்ரீ லக்ஷ்மி தேவி ஸ்வரூபத்தில் வன்னிமரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறார் ஸ்ரீ திகம்பர ஸ்வாமிகள் மற்றொரு சிறப்பாக தர்ப்பை செடிகள், வெள்ளெருக்கு செடிகள் கொண்டு காட்சி அளிக்கிறார்.

9 ஆடி ஸ்ரீ வேதலிங்கேஸ்வரர்

புலிவலம் ஸ்ரீ சயன சாய் (சமாதி) ஆலயத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தரும் ஸ்ரீ வேதலிங்கேஸ்வரர் 9 ஆடியில் பக்தர்கலை அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். பிரதி பிரதோஷம், சிவராத்திரி, மஹாசிவராத்திரி புண்ணிய நாட்களில் பூஜைகள் நடைபெறுகிறது.

மருந்தீஸ்வரர்

புலிவலம் ஸ்ரீ சயனசாய் (சமாதி) ஆலயத்தில் மற்றும் ஒருசிறப்பாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலாம்பிகை சமேத மருந்தீஸ்வரர் மக்கள் பிணிகளைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றார். (ஸ்ரீ பாலம்பிகை மருந்தீஸ்வர் )

ஸ்ரீ பிக்க்ஷை பாபா

ஷீரடி துவாரகமாயியில் போட்டோவில் பக்தர்களுக்கு தரிசனமளித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பிக்க்ஷை பாபா, புலிவலம் ஸ்ரீ சயன சாய (சமாதி) ஆலயத்தில் சுதை வடிவாக பக்தர்களுக்கு 6.3.2022 முதல் தரிசனம் தந்து கொண்டு இருக்கின்றார். மிக மிக விசேஷ ஸ்ரீ பிக்க்ஷையாபா சிலை கிழகத்தில் (Under Ground) 92 லட்சம் புண்ணியவான்கள் (பாபாவுடன் வாழ்ந்தவர்கள்) அவர்களில் ஒருவரான பாபா சேவர்கர் நரஹரிக்கு வழங்கிய சக்தி சுலோகங்கள் "ஜென்ம ஜென்மோ ஜென்மி ஸ்ரீ சரண் ஸ்ரீ பாக்கிய சாய்" -பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

பொங்கு சனிபகவான்

புலிவலம் ஸ்ரீ சயன சாய் (சமாதி) ஆலயத்தில் இதுவரை எங்கும் காணாத அற்புத ஸ்தலமாக ஸ்ரீ பொங்கு சனி பகவான் 17.2.2018 ல் நிறுவப்பட்டு சனி பெயர்ச்சி, சனி பிரதோஷம் ஆகிய நாட்களில் மிக விமர்சையாக பூஜைகள், யாகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இனி இரண்டாவது மஹா தீட்சையாக

புலிவலம் ஸ்ரீ சயன சாய்பாபா பிரதிஷ்டை/ கும்பாபிஷேகம் 23-6-2022 மிக விமர்சையாக நடைபெற்றது.

உலகில் முதல் யோக சயன சாய் இதுவேயாகும், பண்டசிபுரத்திலுள்ள பாபாவின் பாசமிகு பக்தரான நாஸ்ககுசொப்பன் தரிசனத்தில் பாபா. நாக என் சமாதி மீது புஷ்பங்களால் மூடினை என்று கூறினாராம் அந்த புண்ணிய நினைவையொட்டி அன்னதான பிரபுவிற்கு பிரதி வியாழன் தோலும் புலிவலம் ஸ்ரீ யோக சயன சாய் (சமாதி) ஆலயத்தில் புஸ்ப சேனா நடைபெறுகிறது புண்ணியம் பெறும் இந்த புபை சேவாவை நீங்களும் வியாழகிழமைகளில் செய்து ஸ்ரீ யோக சயன சாய்பாபாவின் அருளாசியைப் பெறலாம். 9 நெய் தீபங்களுடன் புஸ்ப சேவா மற்றும் அன்னதான கட்டணம் ரூபா. 3000/- புலிவமை ஸ்ரீ யோக சயன சாய் சாமதி ஆலயத்தில் பாபாவிற்கு நடைபெறும் சாய் புஸ்ப சேவாவை கண்டாலே ஒவ்வொரு சாய் பக்தனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடும்.

உலகில் முதல் ஆலயம் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், சாய் புலிவலம் கிராமத்தில் யோக சயன சாய் (சமாதி) கோயிலில் பக்தர்களுக்காக பாப பாபா நிகழ்த்தப் போகும் மற்றும் ஓர் அற்புதம்!

ஸ்ரீ சிவசாய் யந்திர தர்பார் (ஆலயம்) SHREE SIVA SAI ENTHIRA DARBAR (TEMPLE)

ஸ்ரீ சிவசாய் சமேத 1 டன் எடை கொண்ட ஸ்ரீ சாய் அநுக்கிறஹ் யந்திரத்தின் கீழே பிரதிஸ்டை செய்வதற்கு 108 ஸ்ரீ சாய் அநுக்கிரஹ காயத்ரி மந்திரத்தை எழுதி அனுப்புங்கள். ஸ்ரீ சிவ சாய் யந்திர தர்பார் (ஆலயம்) வழங்கும் 108 முறை பக்தர்கள் எழுதும் ஸ்ரீ சாய் அநுக்கிரஹ காயத்ரி மந்திரம் எழுதும் படிவம், ஸ்ரீ சாய் திவய அனுக்கிரற யந்திர படம். மற்றும் 108 முறை எழுதும் முன் ஸ்ரீ சாய் அனுக்கிரஹ யந்திரத்திற்கு பக்தர்கள் செய்ய வேண்டிய தங்கள் வீட்டில் தனவரவு தரும் | விளக்கு பூஜை விபரம் முற்றிலும் இலவசம்.

கர்மா தொலைய தங்களின் இன்னல்கள், வியாதிகள், குறைகள் தீர, முகதி பெற: பணம் புகழ், செல்வாக்கு பணவரவை சீராக்கி சுகம் அடைய எழுதங்கள் 108 ஸ்ரீ சாய் அனுக்கிர காயத்திரி மந்திரத்தை தங்கள் வேண்டுவன அனைத்தும் அள்ளித் தருபவன் கோமாதாவே

புலிவலம் ஸ்ரீ சாய் சமாதி ஆலயத்தில் கோசாலை பணிகள் விரைவில் துவங்கவுள்ளதால். மற்றும் கோக்களுக்குறிய பராமரிப்புக்காகவும் இப்பொழுது உள்ள கோகளை பரமரிப்புக்காகவும் இயன்றயளவு உதவிகளை புலிவலம் ஸ்ரீ சாய் (சமாதி) ஆலயம் எதிர்பார்க்கிறது.

புலிவலம் ஸ்ரீ சாய் சமாதி ஆலயத்தில் கோசாலை பணிகள் துவங்கவுள்ள தருணத்தில் சாய் பகதர்கள் பண்டிகை காலம் மற்றும் தாங்கள் விரும்பும் விசேஷ நாட்களில் இப்புனித திருப்பணிக்கு உதவிசெய்துமகிழுங்கள். இப்பொழுது ஆலயத்திலுள்ள பசுக்களுக்கு உணவளித்து கோமாதாவின் ஆசியை பெற்று பிரசாதங்களை பெறுங்கள். கோசேவை செய்வதன் மூலம் தலைமுறை தோஷம், புலிவலம் ஸ்ரீ கருங்காலி வாராகி அம்மன் ஆலயம் உலகில் முதல் ஸ்ரீ கருங்காலி வாராகி அம்மன் ஆலயமாக புலிவலம் ஸ்ரீ சயன சாய் பாபா ஆலய வளாகத்தில் உருவாக உள்ளது